உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.இளம் செஸ் சாம்பியனாக வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதியுதவி எனது வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது. வெற்றியுடன் திரும்பும் போதெல்லாம் முதலமைச்சர் வாழ்த்துவது மகிழ்ச்சி தருகிறது. என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது.
Please follow and like us: