தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன..!!

Spread the love

சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் தொடர்ந்து விவாதப்பொருளாகி உள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசிய அவர், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். இதனால் அவரை இந்து அமைப்பினரும், பாஜகவினரும் தொடர்ந்து விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சை நியாயப்படுத்துவதுடன், சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை என்றார்.

இந்த விவாதம் ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான (பிளஸ் டூ) அறவியலும் இந்திய பண்பாடும் என்ற பாட புத்தகத்தின் பக்கம் 58-ல், “இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில், து-துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்துவதாகவே இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.

இது தொடர்பான புகைப்படங்களை மோடியின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ’12 ஆம் வகுப்புக்கான தமிழ்நாடு மாநில அரசு புத்தகத்தில் இருந்து ஒரு சான்று இதோ. சனாதன தர்மம் இந்து மதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, தி.மு.க.வினர் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது தெளிவாகத் தெரிகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram