அஹ்சன் என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் செயலியில் ஸ்பார்க்ஸ் என்ற காலணியை ஆர்டர் செய்துள்ளார். 1 வாரத்திற்கு பிறகு இன்று வரும், நாளை வரும் என காத்திருந்தவர் காலப்போக்கில் அதனை மறந்துள்ளார். இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இந்த ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை ஃபிளிப்கார்ட் நிறுவன ஊழியர் வீட்டிற்கு வந்து கொடுத்துள்ளார். இதனை அஹ்சன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆறு வருடத்திற்கு பின் இந்த ஆர்டருக்காக ஃபிளிப்கார்ட் என்னை அழைத்து, என்ன பிரச்னைகளை நீங்கள் எதிர்கொண்டீர்கள் என கேட்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பல கருத்துகள் குவிந்து வருகின்றன.
Please follow and like us: