ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகளின் வர்த்தகத்திற்கான வரம்பை (பிரைஸ் பேண்ட்) மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்இ) மாற்றியமைத்தது. அதாவது பிரைஸ் பேண்டை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக திருத்தியது. இதேபோல் ரெயில்டெல் உள்ளிட்ட 9 நிறுவனங்களின் பிரைஸ் பேண்டும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய வரம்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது பங்கின் மதிப்பு உயரத் தொடங்கியது. மதிய நிலவரப்படி ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக நாளைவிட 8.84 சதவீதம் உயர்ந்து 267 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. பங்கு விலையில் நிகர மாற்றம் 13.55 ஆக இருக்கிறது.
மும்பை பங்குச்சந்தையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்கின் மதிப்பு உயரத் தொடங்கியது. கடைசி வர்த்தக நாளில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.236ல் தொடங்கி 233.65 ரூபாயில் நிலைபெற்றது.
NEWS EDITOR : RP