சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி மற்றும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.குறிப்பாக சின்ன வெங்காயம் தான் பொதுமக்களுக்கு அதிகளவில் அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்று முன்தினம் கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை சதம் அடித்தது. அடுத்தடுத்த நாட்களில் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். காரணம் இன்று கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம், ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
NEWS EDITOR : RP
Please follow and like us: