தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு விளைவிக்கப்படுகிறது. அதேபோல, வட மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டுகளைக் கொண்டே, மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பூண்டு மொத்த விற்பனை மையமாக செவ்வாய்ப் பேட்டை பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளது. இங்கிருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூண்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.சேலத்தைச் சேர்ந்த பூண்டு வியாபாரிகள் கூறியது:கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பூண்டு சிறிய ரகம் கிலோ ரூ.180 என்ற விலையிலும், நடுத்தர ரகம் ரூ.240, உலர்ந்த உயர்தரமான பூண்டு ரூ.280 என்ற விலையில் விற்பனையானது. ஆனால் வரத்து மிகவும் குறைந்து விட்டதால் தற்போது, சிறிய ரக பூண்டு கிலோ ரூ.380-க்கும், நடுத்தரம் ரூ.420-க்கும், உயர்தரம் ரூ.520-க்கும் விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினர்.
Please follow and like us:
