தென்மும்பை கொலாபா பகுதியில் நேற்று போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் சந்தேகம் படும்படி நடமாடியதை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த மெபட்ரோன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த கொலாபாவில் பதுங்கி இருந்த ஒருவரும், டோங்கிரியில் பதுங்கி இருந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட 4 பேரிடம் இருந்து மொத்தம் 705 மெபட்ரோன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 41 லட்சம் ஆகும்.
NEWS EDITOR : RP
Please follow and like us: