சிட்னி – டெல்லி விமானத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரை சக பயணி கன்னத்தில் அறைந்துள்ளார். விமானத்தில் இருக்கையை மாற்றிக்கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர், விமானத்தில் பயணம் செய்த ஏர் இந்தியா அதிகாரியை கண்ணத்தில் அறைந்துள்ளார்.
விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு தாக்குதல் நடத்திய பயணி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடுவானில் ஏர் இந்தியா அதிகாரியை பயணி ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை 9, 2023 அன்று சிட்னி-டெல்லியில் இயக்கப்படும் ஏ1-301 விமானத்தில் பயணி ஒருவர், வாக்குவாதம் மற்றும் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகளை மீறி நடந்து கொண்டார், இது மற்ற பயணிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தியது. இதில் எங்கள் ஊழியர்களில் ஒருவரும் அடங்கும்.” “விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியதும், பயணி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார், பின்னர் பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
NEWS EDITOR : RP