தேசிய தேர்வு முகமை நடத்தும் முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுவது JEE தேர்வு. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இந்தியாவில் உள்ள IIT, NITகளில் சேர முடியும். அந்த வகையில், 2024-ம் ஆண்டு JEE முதன்மைத் தேர்வு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்றும், இரண்டாவது தேர்வு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல் க்யூட் தேர்வு 2024-ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும், இளநிலை நீட் தேர்வு மே மாதம் 5-ம் தேதி நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2024 – 25-ம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த அட்டவணையை என்டிஏ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை, என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் JEE நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களும் விரைவாகவே தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் அல்லது தேர்வுகள் குறித்து jeemain.nta.nic.in அல்லது nta.ac.in தளங்களில் அறியலாம்.
NEWS EDITOR : RP