நடிகர் விஜய் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா வாழ்வில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக ‘கில்லி’ அமைந்தது. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான திரைப்படம் 2004 ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ திரைப்படத்தின் ரீமேக்கான ‘கில்லி’ திரைப்படம், ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்தது. இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால், இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் 4K டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ’கில்லி’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
‘கில்லி’ திரைப்படம் மறுவெளியீட்டில் மிகப்பெரிய வெற்றி..!!
Please follow and like us: