சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியா
சார்பில் டைம்ஸ் ஹெல்த் கேர் அச்சுவர் விருது வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக செயலாற்றிய மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும் விருதினை வழங்கினார்.
உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தேசிய தர நிர்ணய ஆணையத்தால் 2013 முதல் தற்போது வரை 488 விருதுகள் தமிழக அரசு பெற்றுள்ளது.
அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் 38 ரூபாய் கோடி மதிப்பில் ரோபோடிக்
கேன்சர் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிண்டி கலைஞர் பல்னோக்கு மருத்துவமனை ரூ.1,000 கோடியில் கட்டப்பட்டது. மேலும் தற்போது வரை நாள் ஒன்றுக்கு 700 புற நோயாளிகளும் நூறு உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்களை தேடி மருத்துவம் இதயம் காப்போம் திட்டம் சிறுநீரக காப்போம் திட்டம்
உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை இந்தியா முழுவதும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.மேலும், ஜனவரி மாதத்தில் அகில உலக மருத்துவ மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. உலகில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் இந்த மாநாட்டின் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்.
NEWS EDITOR : RP