ஐசிசி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சுப்மன் கில்லும் இடம்பெற்றிருந்தார். இவர் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக போட்டியில் விளையாடமல் இருந்த நிலையில் நேற்றைய இந்தியா பாகிஸ்தான் போட்டியில் சுப்மன் கில் கலந்து கொண்டு விளையாடினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருகிறார். மேலும் கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் அவர் பல சாதனைகளை படைத்து வருகிறார். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஷாம் 863 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 59 புள்ளிகளை எடுத்து 2வது இடத்துக்கு முன்னேறினார். இந்த நிலையில் 192 ரன்கள் என்கிற இலக்குடன் இந்தியா தனது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் பவுண்டரியுடன் ரன் வேட்டையை ஆரம்பித்து வைத்தார் ரோஹித் ஷர்மா. அதிரடியான தொடக்கத்தை தந்து 16 ரன்கள் எடுத்த சுப்மன் கில், ஷாகின் அப்ரிடி பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
NEWS EDITOR : RP