திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறைச்சாலையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் பணியில் இருக்கும் போதே கிளை சிறைச்சாலை வளாகத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பணியில் இருக்கும் போதே அநாகரீகமாக நடந்து கொண்ட தலைமை காவலர் மீது சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உத்தரவிட்டார். அதன்படி வேலூர் சிறைக்கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் துறைரீதியிலான விசாரணை நடத்தினர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: