கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும் என ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.இப்படத்தின் முதல்பார்வை நாளை மறுநாள் (நவ. 27) மாலை 12.25 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ஒரு போஸ்டருடன் படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது. காந்தாரா முதல் பாகம் ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், காந்தாரா- 2 படத்தில் இடம் பெறவுள்ள சண்டை காட்சிக்காக ரிஷப் ஷெட்டி பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக “காந்தாரா 2” உருவாகும் எனவும், படத்தின் பட்ஜெட் ரூ.125 கோடி எனவும் தகவல் வெளியானது.
NEWS EDITOR : RP