சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இலனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் குரலில் வரும் நானே எதிர்த்து நின்றாலும் என் கனவது வீழாது என்ற வாசகம் நேடிசன்களால் சிலாகித்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளையொட்டி ஸ்டார் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி இன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
NEWS EDITOR : RP