நீண்ட நாட்களுக்கு பின் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் 53வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. ஜன. 25 முதல் பிப். 4 வரை நடைபெறவுள்ள இந்தப் பட விழாவில் பிக் ஸ்க்ரீன்போட்டி பிரிவுக்கு இத்திரைப்படம் தேர்வாகி உள்ளது.
Please follow and like us: