சேத்துப்பட்டு தேசூர் பேரூராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 8 பேர் மற்றும் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் மகளிர் குழுவினருடன் இணைந்து இன்று காலை 6 மணி அளவில் திடீரென பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், வேலைக்கு வரும்போது உணவுகளை கொண்டு வர வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் அதிகாலையில் உணவு எடுத்து வரமுடியாத சூழ்நிலை உள்ளது. எங்களுக்கு வேறு நேரத்தை ஒதுக்கி கொடுங்கள் என்று கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செயல் அலுவலர் ஜெயந்தி மற்றும் பேரூராட்சி தலைவர் ராதா ஜெவீரபாண்டியன் ஆகியோர் வந்து, காலை 8.30 மணியில் இருந்து 9 மணிக்குள் உணவு நேரம் எடுத்துக்கொண்டு பணிகளை செய்யுங்கள்.
மற்ற வேலைகளுக்கு நீங்கள் செல்லக்கூடாது. துப்புரவு பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்றனர். மேலும் குப்பைகளை அகற்றி, பேரூராட்சியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று பணிகளை தொடங்கினார்கள்.
ேமலும் இவர்களை செயல்படுத்தும் சுகாதார மேற்பார்வையாளர் ராமச்சந்திரனை அழைத்து மீண்டும் இதுபோல் போராட்டம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
NEWS EDITOR : RP