ஆவடி காமராஜர் நகர், தாமரை தெருவைச் சேர்ந்தவர் குரு சத்யா (32). ஓட்டுநராக பணிபுரியும் இவர் திவ்யா (24) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குரு சத்யாவுக்கு, ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யாவுக்கும், திவ்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, திவ்யா விவாகரத்து கோரி பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே தாய் வீட்டில் தங்கியுள்ள திவ்யாவிடம் சென்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் குருசத்யா.
Please follow and like us: