தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹுவாஸ்காரன்’ மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்ஃபில் என்ற மலையேற்ற வீரர் அவரது நண்பர்களான மேத்யூ ரிச்சர்ட்சன், ஸ்டீவ் எர்ஸ்கைன் ஆகியோருடன் ஹுவாஸ்காரன் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வில்லியம் ஸ்டாம்ஃபில் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.இந்நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் ஹுவாஸ்காரன் மலையில் உள்ள கார்டிலெரா பிளாங்கா மலைத்தொடரில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டஸ் மலையில் புதைந்த வில்லியமின் உடல் முழுவதும் பனிக்கட்டியால் உறைந்ததால் அவரது உடல் இயற்கையாகவே பதப்படுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தால் பனி உருகிய நிலையில் அவரது பாஸ்போட்டை வைத்து அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.