ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று அந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது. அதில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு நடவடிக்கையாக, வணிக வளாகத்திலிருந்த பலரும் பாதுகாப்பாக வெளியற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என அங்கிருந்து வரும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலையுடன் சேர்த்து அணியப்படும் ஹூடி போன்ற ஆடையை அணிந்துகொண்டிருந்த கொலையாளி தனது கையில் கத்தியை வைத்துக்கொண்டு, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டித் தாக்கியதாக, நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.
Please follow and like us:
