தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், நவிப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்பவர், தனது நான்கு வயது மகள் ருஷிதாவுடன், அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது சாக்லேட் எடுப்பதற்காக, சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பிரிட்ஜை சிறுமி ருஷிதா திறந்தபோது, அவர்மீது மின்சாரம் பாய்ந்தது.சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசைவின்றி நின்ற சிறுமி ருஷிதாவை, மற்றொரு ஃபிரிட்ஜில் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த ராஜசேகர் இழுத்து கீழே தள்ளி, அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ருஷிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP