திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. உடலில் கருப்பு நிற பேண்ட்டும், கருப்பு நிற பனியன், வயலட் கலர் சர்ட் அணிந்திருந்தார். வலது கையில் ரிங்கு என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: