தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, தற்போது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து, படங்களைத் தயாரித்தும் வருகிறார்.‘சாய் வாலே’ என்ற டீக்கடை வியாபாரத்திலும் பெரும் முதலீடு செய்து அத்தனையும் நடத்தி வரும் நயன்தார சமீபத்தில் சென்னையில் பிரபலமாக இருந்து, இழுத்து மூடப்பட்ட, திரையரங்கமான அகஸ்தியா என்ற திரையரங்கை வங்கியதாக தகவல்கள் வெளியாகியானது.
சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த திரையரங்கை தன் நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நயன்தாரா அப்பகுதியில் மேலும் இரண்டு தியேட்டர்களைக் கட்டவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுபோக தன் சொந்தத் தேவைகளுக்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்துள்ளார்.இந்த நிறுவனத்தின் துவக்க விழா வருகிற செப்.29 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இதற்கான, விளம்பரப் பணிகளை நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு படத்திற்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படும் நயன்தாரா சமீபத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் பாலிவுட் மட்டுமல்ல உலக அளவில் வசூலை குவித்து வருகிறது.
இந்த நிலையில், நயன்தாரா தற்போது சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி செய்யும் தொழிலை துவங்க உள்ளார். இந்த புதிய தொழிலுக்கு 9ஸ்கின் எனப் பெயரிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
NEWS EDITOR : RP