ஏழை மக்களுக்கு எத்தனையோ நலத்திட்டங்கள் அ.தி.மு.க. அரசில் கொண்டு வரப்பட்டது. அதில் ஏதாவது தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளதா?. அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதால் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தை திறக்காமல் தி.மு.க. அரசு வைத்துள்ளது. அ.தி.மு.க. கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியது தி.மு.க. அரசு.
போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இதனால் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் தினந்தோறும் நடக்கிறது. எத்தனை வழக்கு போட்டாலும் அதை சந்திக்கும் தெம்பு, திராணி, தைரியம் அ.தி.மு.க. தொண்டனுக்கும், நிர்வாகிக்கும் உண்டு.
எழுதாத பேனாவுக்கு ரூ.83 கோடியில் கடலில் சிலை வைக்கிறார்கள், அதனை அறிவாலயத்தில அல்லது நினைவு இடத்தில் ரூ.3 கோடியில் வையுங்கள். மீதி பணத்தை மாணவர்கள் பயன்படுத்தும் பேனாவுக்கு பயன்படுத்துங்கள். மக்கள் பயனைடைவார்கள். இந்த ஆட்சியில் விலைவாசி 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஆட்சியை அகற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். அதற்காக நாம் பாடுபட வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்று நம்புகிறோம். அப்போது தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் ஆண்டவனாலும் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது.
NEWS EDITOR : RP