
புஸ்ஸி ஆனந்திடம் விசாரித்த விஜய் !
த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பௌன்சர்கள் தான் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டினை புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார். இந்த நிலையில், விஜய் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இந்த பௌன்சர்களால்தான் பிரச்சனை வெடிக் கிறது. கட்சி அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பௌன்சர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். கட்சி நிர்வாகிகள் கூட அரங்கத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு பௌன்சர்கள் தடுத்த போது, அவர்களூடன் நிர்வாகிகள் மல்லுக்கட்டிய சம்பவமும் நடந்தது. அண்மையில், சென்னை ராயப்பேட்டை…