Tag: #tamilnews

பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு..!! குழு நிறுவனர் கே.ஆர்.பி.இளங்கோ கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்..!!

பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர்கள் ரஜினி, சுரேஷ், ஆனந்த், முன்னாள் பொருளாளர் பரமசிவன், ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்தான விழிப்புணர்வு குழு…

சேலத்தில் முதன் முறையாக ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி..!! இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுக்கு உற்சாக நடனம்..!!

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.வாரம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள்…

இறந்த மகனின் உடலை அவரது தாய் தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது..!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே இறந்து கிடந்து உள்ளார். பல மணி நேரமாக அவரது உடல் அங்கேயே கிடந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.…

‘பிரபாஸ்’ மற்றும் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு முதல் முறையாக மனம் திறந்து நடிகை ‘அனுஷ்கா ஷெட்டி’..!!

தமிழில், சிங்கம், வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், தாண்டவம், என்னை அறிந்தால், பாகுபலி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனுஷ்கா. தற்போது மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி படத்துக்கான பிரமோஷன் பணிகளில் ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார். இது அவருக்கு 48வது திரைப்படம்…

செரிமானம் மற்றும் வாயுக் கோளாறுகளுக்கான மருந்தான டைஜீன் ஜெல்லை அப்போட் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது..!!

கோவாவில் அமைந்துள்ள அபோட் (Abbott) நிறுவனத்தின் ஆன்டாக்சிட் டைஜீன் மருந்துக்கு எதிராக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவாவில் உள்ள அபோட் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த மருந்தை பயன்படுத்துவதை நிறுத்துமாறு நோயாளிகளைக் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்…

ரூ.9¼ லட்சத்திற்கு பருத்தி விற்பனை..!!

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 463 மூட்டைகள் பருத்தி வந்தன. இது கடந்த வாரத்தை காட்டிலும் 276 மூட்டைகள் குறைவு ஆகும். இதில் ஆர்.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரம முதல் ரூ.7355…

தீராத வயிற்று வலியால் அவதியடைந்த கொத்தனார் விஷ விதைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31), கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட திருநாவுக்கரசு பல்வேறு இடங்களில் சிகிச்சை…

வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது..!!

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் பலியானார். திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த குப்பையங்காடு பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம்.…

காவல்துறை சார்பில் பெண்கள், மாணவ- மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது..!!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இமைகள் திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தோரணம்பதி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

வேலூரில் லாரிகள் மோதிய விபத்தில் பீகார் வாலிபர் பலியானார்..!!

சென்னையில் இருந்து கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை பீகாரை சேர்ந்த வாலிபர் ஓட்டினார். அதில் பீகார் மாநிலம் கான்பூரை சேர்ந்த மோதிலால்குமார் (வயது 35) கிளீனராக இருந்தார். அதிகாலை 3 மணியளவில் வேலூர்…

WhatsApp
YouTube
Instagram
Telegram