ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்..? என்பது குறித்து சாய்ரா பானு விளக்கம்..!!
ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்? என்பது குறித்து அவரின் மனைவி சாய்ரா பானு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சாய்ரா பானு கூறியிருப்பதாவது, “நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த 2 மாதங்களாக எனது உடல்நிலை சரியில்லை. அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து விலகியிருக்கிறேன். அவரைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். உலகிலேயே தலைசிறந்த மனிதர் அவர். என்னுடைய குழந்தைகள், ஏ.ஆர்.ரஹ்மான் என யாரையும் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது….