இன்று வெளியான சலார் படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தள பக்கத்தில் படம் குறித்த விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்..!!

பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ்,  தற்போது கே.ஜி.எஃப் படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸூடன் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று உலக முழுவதும்…

மேலும் படிக்க

சென்னையில் தங்கம் விலை உயர்வு..!!

தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும்,  மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.  அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வரும் நிலையில், இன்று 47,000 நெருங்கியுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஒரு கிராம்  30 காசுகள் உயர்ந்து ரூ.80.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300…

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் இன்று முதல் (டிச.22 ), டிச. 28 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!! 

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, டிச. 22 மற்றும் 23 தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. டிச. 24 தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.25 முதல் 28 வரை…

மேலும் படிக்க

புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..!!

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில் சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிச.21) முடிவடைய இருந்தது.இந்த நிலையில் அதிகளவிலான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவதால் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது.  இதனை தொடர்ந்து ஹஜ் பயணம் செய்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி…

மேலும் படிக்க

2023-ம் ஆண்டில் 1,526 சைபர் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், மோசடி நபர்களிடமிருந்து ரூ. 2.18 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது..!!

சென்னை மத்திய குற்ற பிரிவு, சைபர் கிரைம் பிரிவினரால் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களைச் சார்ந்த பொறுப்பு அதிகாரிகள் 60 பேர் பங்கேற்றனர்.  கூட்டத்தின் போது சைபர் குற்ற பிரிவில் 2023-ம் வருடத்தில் மட்டும் 1,526 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் குற்ற செயல்களில்…

மேலும் படிக்க

பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை’ உயர்நீதிமன்றம்!

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில்,  உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது,  வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக,  அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,  பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.  இந்த உத்தரவை மறு…

மேலும் படிக்க

கனமழை வெள்ளத்துக்கு மத்தியில் பிறந்த 91 குழந்தைகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், கடந்த 17ஆம் தேதி காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கா்ப்பிணி பெண்கள் குறித்த தகவலை ஆட்சியா் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து, மாவட்டத்தில் அடுத்த 30 நாள்களில் பிரசவிக்கக்கூடிய 696 கா்ப்பிணிகளை நேரடியாக தொடா்பு கொண்டு அவா்கள் அனைவரையும் மருத்துவமனையில் சேர அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கா்ப்பிணிகள்…

மேலும் படிக்க

தூத்துக்குடியில் இருந்து நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்சேவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படவிருந்த 24 ரயில்கள் செய்யப்பட்டன. செங்கோட்டை,…

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு

மிக்ஜாம் புயலால் விழுந்த மரங்களுக்கு மாற்றாக 5,000 புதிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் வடிவேலு, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். “அமைச்சர் மா.சுப்ரமணியன் போன்ற திறமையானவர்களை தேர்ந்தெடுத்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது உடலுக்கு நுரையீரலை போல பூமியின் நுரையீரல் மரங்கள் ஆகும். அதனை வெட்டுவது நமது நுரையீரலை வெட்டுவதற்கு சமமாகும். இந்த நல்ல முயற்சியை தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் செய்ய வேண்டும்….

மேலும் படிக்க

புனித ஹஜ் பயணம் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில் சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிச.21) முடிவடைய இருந்தது.இந்த நிலையில் அதிகளவிலான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவதால் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது.  இதனை தொடர்ந்து ஹஜ் பயணம் செய்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram