ராஜஸ்தானில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம் – 2 பெண்கள் உள்பட மூவர் உயிரிழப்பு

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான MiG-21 போர் விமானம் ஒன்று ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இன்று (மே 08) காலை வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் பகுதியில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், ஹனுமன்கர் மாவட்டத்துக்குள் நுழைந்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய அந்த போர் விமானம் பலோல்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு…

மேலும் படிக்க

இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு ( CORONA )

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1389 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 1839 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 25,178 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 11 பேர் உயிரிழந்தனர். இதுவரை தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,692 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

மேலும் படிக்க

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில். 10.05 மணிக்கு தான் அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 94.03 சதவீத பேர் தேர்ச்சி: தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேர் பேரில், 7,55,451 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதன்படி 94.03 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி…

மேலும் படிக்க

+12 RESULTS | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் | அரசுப் பள்ளிகளில் 89.80% தேர்ச்சி: 326 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி உள்ளனர். கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வரை நடைபெற்ற தேர்வு தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இந்த தேர்வின் முடிவுகளை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை…

மேலும் படிக்க

தலையில் அடிபட்ட சிறுவனுக்கு தையலுக்கு பதில் பெவிகுயிக் தடவிய அதிர்ச்சி சம்பவம்- Feviquick applied in response to the stitch the wound

தெலுங்கானா மாநிலம், ஜோகுலம்பா கத்வேல் பகுதியைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா என்பவரின் மகன் பிரணவ் கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு புருவத்தில் அடிப்பட்டுள்ளது. உடனடியாக மகனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்து சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக்கை பூசி ஒட்டி அனுப்பி வைத்தனர். கண் புருவத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிக்காமல் அந்தப் பகுதி ஒட்டப்பட்டு…

மேலும் படிக்க

இது ஓட்டுப் போடாதவர்களுக்குமான ஆட்சி – முதல்வர் ஸ்டாலின்

இன்று (மே 7) முதல் 9-ஆம் தேதி வரை திமுக ஆட்சி குறித்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியது: “விமர்சனங்கள் குறித்து நான் இம்மியளவும் கவலைப்படுவதில்லை. நல்லவற்றை ஏற்றுக் கொள்கிறேன்….

மேலும் படிக்க

ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் ஸ்டூடியோஸ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. சமீபகாலமாக திரைப்படத் தயாரிப்பிலிருந்து இந்த நிறுவனம் விலகியுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி திருமண மண்டபமாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ள நிலையில், 3வது அரங்கில் ஆரம்பகால சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்களை கொண்ட ஹெரிடேஜ் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர்…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று முதல் ‘THE KERALA STORY’ திரையிடப்படாது – மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அறிவிப்பு

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நேற்று வெளியானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தடை செய்ய  உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த…

மேலும் படிக்க

மும்பை அணியை வீழ்த்தி CSK அணி அதிரடி வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். மூன்று ஓவர்களின் முடிவிலேயே  மூன்று விக்கெட்களை இழந்துள்ளது.  ரோஹித் சர்மா, இஷாந்த் கிஸன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலேயே டக் அவுட் ஆனார். இதன் பின்னர் நிதானமாக…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram