எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பாத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி மனுவில் உண்மை தன்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்..! வானிலை மையம் தகவல்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை வரை உயர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை மற்றும் வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த…

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு – விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அவர்…

மேலும் படிக்க

சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,472 -க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.78,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

அன்னையர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து | Mother’s Day: Wishes from Chief Minister MK Stalin

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கொடைக்கானல் மலர் கண்காட்சி, கோடை விழா மே 26-ல் STARTS

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 26-ல் தொடங்கி ஜூன் 2 வரை நடைபெற உள்ளது என வருவாய் கோட்டாட்சியர் ரா.ராஜா தெரிவித்துள்ளார். கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 60-வது மலர் கண்காட்சி மே 26-ல் தொடங்கி மே 28 வரை நடைபெற உள்ளது. இதே போல், கோடை விழா மே 26-ல் தொடங்கி ஜூன் 2 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பிரையன்ட்…

மேலும் படிக்க

டெல்லியில் CONGRESS தொண்டர்கள் கொண்டாட்டம் –

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 73 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் தற்போதே கொண்டாடி வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை அடுத்து பிரியங்கா காந்தி…

மேலும் படிக்க

அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி |

சென்னையில் சாலை அமைப்பதில் தாமதம் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமையேற்ற நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, புதிய சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரவும், ஒப்பந்த நிலையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர், ஆலந்துார், பெருங்குடி மண்டலங்களில், சாலைகளில் ஐந்து நாட்களுக்கு மேல் பணிகளை துவக்காத ஒப்பந்ததாரர்களுக்கு,…

மேலும் படிக்க

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரம்: காலை 9 மணி வரை நிலவரப்படி காங்கிரஸ் 101 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 82 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 23…

மேலும் படிக்க

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 357-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram