ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகை..!!
புதுடெல்லி, ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்தோரியஸ் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை புதுடெல்லிக்கு வருகை தந்து உள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்திற்கு சென்ற அவர், வீரமரணம் அடைந்த இந்திய ஆயுத படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதுபற்றி இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜெர்மனி நாட்டின்…