ஒடிசா ரெயில் விபத்து..!!

புவனேஸ்வர் மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது. இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதி தடம்புரண்டதால் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 275பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ரெயில்…

மேலும் படிக்க

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்..!!

இம்பால், மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மணிப்பூருக்கு நேரில் சென்ற மந்திரி அமித்ஷா, தலைநகர் இம்பால், காங்போக்பி, மோரே, சுராசந்த்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார். இதன்பின், குகி, மெய்தய் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாப்பு படையினருடனான சந்திப்பை கடந்த புதன்கிழமை நடத்தினார். தொடர்ந்து…

மேலும் படிக்க

அமெரிக்க கப்பல் மீது மோதுவது போல சென்ற சீன கப்பல்..!!

தைபே, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் சீனா இன்னும் அதனை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என கூறி வருகிறது. இதனால் தைவானோடு நேரடி வர்த்தக, தூதரக உறவுகளில் ஈடுபடக்கூடாது என மற்ற நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இருந்து வருகின்றன. இதற்கிடையே சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் அதிபர் சாய்-இங்-வென் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை…

மேலும் படிக்க

சர்ச்சை கதையில் நடித்த பிரபல நடிகை விளக்கம்..!!

இந்தியில் தயாராகி சமீபத்தில் திரைக்கு வந்த தி கேரளா ஸ்டோரி படம் சர்ச்சையில் சிக்கியது. படத்துக்கு மேற்கு வங்காள அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டிலும் படத்தை திரையிடுவதை நிறுத்தினர். தி கேரளா ஸ்டோரி படத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். சித்தி இத்னானி தமிழில் ஏற்கனவே வெந்து தணிந்தது காடு மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து…

மேலும் படிக்க

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.13 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை..!!

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 2,988 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.578-க்கும், குறைந்தபட்சமாக ரூ.215-க்கும், சராசரியாக ரூ.436.99-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து 5 ஆயிரத்து 880-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

ஹைதி நாட்டில் கனமழை, நிலச்சரிவு..!!

போர்ட்-ஆவ்-பிரின்ஸ், ஹைதி நாட்டில் கும்பல், கும்பலாக வன்முறை தாக்குதலில் ஈடுபடுதல், அரசியல் தோல்வி மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட மனிதநேயம் சார்ந்த பேரிடரில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களில், திடீரென ஏற்பட்டு உள்ள தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிக்கி 42 பேர் வரை பலியாகி உள்ளனர். 11 பேரை காணவில்லை. இதுபற்றி ஐ.நா. அமைப்பு வெளியிட்ட…

மேலும் படிக்க

அரிக்கொம்பன் யானை வழக்கு..!!

மதுரை, கேரள மாநிலத்தில் 10க்கு மேற்பட்ட நபர்களைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு பலரது வீடு மற்றும் பொருட்களைச் சேதப்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து கம்பம் பகுதி முழுவதும் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனிடையே அரிக் கொம்பன்…

மேலும் படிக்க

வெளிநாடு முதலீடுகள் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!!

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழக அரசின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள் முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து விமர்சிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மாநில அரசின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளியிட்ட பதில் அறிக்கை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பொருந்தும். வெளிநாடு முதலீடுகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்க…

மேலும் படிக்க

தேன்கனிக்கோட்டையில் ஆசிரியர் வீட்டின் காம்பவுண்டு சுவரில் சிக்கிய 23 பாம்புகள்..!!

தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை விஜய நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் காம்பவுண்டு சுவரில் உள்ள துளையில் நாகப்பாம்பு புகுந்தது. இதை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்த வாட்ச் முபாரக் (வயது 38), புல்லட் முபாரக் (34), சையத் முஜாமில் (30) ஆகியோருடன் சென்று பாம்பை…

மேலும் படிக்க

யுனெஸ்கோ விருது பெற்ற வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!!

சென்னை, யுனெஸ்கோ விருது பெற்ற இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜெகதீஷ் பகனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான திரு. ஜெகதீஷ் அவர்கள் UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான (#BiosphereReserveManagement) #MichelBatisseAward-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram