தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (07.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர். அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. (08.06.2023 முதல்…

மேலும் படிக்க

சர்க்கரை அல்லாத இனிப்புகள் தொடர்பான எச்சரிக்கை ஏற்புடையது அல்ல..!!

சர்க்கரை அல்லாத இனிப்புகள் பயன்படுத்துதல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதல் மற்றும் எச்சரிக்கை ஒன்றை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. சிலர் உடல் எடையை குறைக்க சர்க்கரை அல்லாத இனிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவற்றை நீண்ட காலம் பயன்படுத்தும் போது டைப் 2 நீரிழிவு மற்றும் இதயநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், எனவே அவற்றை பயன்படுத்துவதை பரிசீலினை செய்யுமாறும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுக்ரலோஸ், அஸ்பார்டேம் சாக்கரின், உள்ளிட்ட சர்க்கரை…

மேலும் படிக்க

மலையடிவார வீடுகளில் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு விவசாய நிலங்கள் ஏராளம் என்பதால், விவசாயத்தையே இப்பகுதி மக்கள் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேகமலை புலிகள் மற்றும் சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக இங்கு சுற்றித் திரியும் வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களை சூரையாடி பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகம். இதனால் மக்கள் தங்கள் நிலங்களைச் சுற்றி மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை…

மேலும் படிக்க

இலவசமாக பழச்சாறு தரும்படி தகராறு..!!

சென்னை, சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஜூஸ் கடைக்கு சென்று உள்ளனர். கடையில் இருந்த விற்பனையாளர்களிடம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்களும் ஜூஸ் ,பிரட் ஆம்லெட், சாக்லேட், குடிநீர் கேன்கள்…

மேலும் படிக்க

மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி: வேணுகோபால் நிலையத்தில் முதல் எந்திரம் வெளியே வருகிறது..!!

சென்னை சென்னையில், 2-ம் கட்டமாக ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், மாதவரம்-தரமணி வரை பாதையில் சுரங்க ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப்பாதையில் மாதவரம்-பெரம்பூர், அயனாவரம்- கெல்லீஸ், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி – ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை – அடையாறு, அடையாறு- தரமணி, கொளத்தூர் – நாதமுனி…

மேலும் படிக்க

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது..!!

சென்னை, மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக்…

மேலும் படிக்க

என்னது பாவ் பாஜி ஐஸ்கிரீமா…?!!

பாவ் பாஜி ஐஸ்கிரீம் என்ற பெயரில் இளைஞர் பதிவேற்றம்  செய்த வீடியோவுக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாவ் பாஜி  பிரபலமான மற்றும் சுவையான மாலை நேர சிற்றுண்டி. மகாராஷ்டிர மாநிலத்தில் உதயமான பாவ் பாஜி இந்தியா முழுவதும் ஏன் வெளிநாடுகளில் கூட பிரபலமாகியுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் அதன் சமையல் முறை மாறும்.  பெரும்பாலும் பாவ் பாஜியை சிற்றுண்டி  கடைகளில் சுவைப்பவர்களே அதிகம். பாவ் பாஜி சுவைக்கு மற்றொரு காரணம் அதன் காரமும் அதில் உள்ள வெண்ணெய்யும் தான்….

மேலும் படிக்க

2025-க்குள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்..!

வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும், இத்தகைய ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மின் நுகர்வோர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் பொறியியல் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். மின்சார பயன்பாட்டு அளவை மிக எளிதாகவும் துல்லியமாகவும் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது….

மேலும் படிக்க

பட்டத்தை பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி..!!

சென்னை சென்னை சூளைமேடு பாரதியார் சாலையில் வசித்து வருபவர் தண்டபாணி. கூலித்தொழிலாளி. இவருடைய 2-வது மகன் பிரசன்னா (வயது 13). நேற்று முன்தினம் மாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வானத்தில் பறந்து வந்த பட்டத்தை பார்த்த பிரசன்னாவும் அவனுடைய நண்பர்களும் அதை படிக்க முயற்சித்தனர். பட்டம் ஒரு வீட்டின் மாடியில் இருந்ததை பார்த்து அதில் ஏறி எடுக்க சென்றனர். அதற்குள் அந்த பட்டம் அருகில் உள்ள மற்றொரு மாடிக்கு பறந்து சென்றுள்ளது. இதையடுத்து பிரசன்னா அந்த பட்டத்தை…

மேலும் படிக்க

திருவொற்றியூர் கடலில் மீனவர் வலையில் சிக்கிய ‘டிரோன்’..!!

சென்னை திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்தவர் அன்பு. மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் 3 பேருடன் சேர்ந்து பைபர் படகு மூலம் திருவொற்றியூர் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றார். அப்போது அவர்கள் வலை வீசி நண்டு பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் ஏதோ ஒரு மர்மபொருள் சிக்கியது. இதையடுத்து மீனவர்கள், அந்த பொருளை எடுத்து பார்த்ததில், சிக்கியது டிரோன் என தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்பியதும், வலையில் சிக்கிய…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram