ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மெரினா காமராஜர் சாலையில் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையம்..!!
சென்னை சென்னை மெரினா காமராஜர் சாலைக்குட்பட்ட அண்ணா சதுக்கத்தில் மத்திய சென்னை எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையையும் திறந்து வைத்தார். மேலும் 15 டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இலவச சீருடைகளையும் அவர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து…