நிர்வாகத் திறனற்ற இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லை..!!
சென்னை, நிர்வாகத் திறனற்ற இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சேலத்தில் மக்கள் நலத் திட்டங்களை நேற்று (11.6.2023) திறந்து வைத்துப் பேசும்போது நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர், மக்கள் பணி செய்யவே நேரம் போதவில்லை என்றும்; மக்கள் விரோதிகளைப் பற்றி பேச ஏது நேரம் என்றும் தனது திருவாயை மலர்ந்திருக்கிறார்….