ரூ.1¼ லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்..!!
திருப்பூர் சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 20 விவசாயிகள் 70 மூட்டை நிலக்கடலையை கொண்டு வந்து இருந்தனர். இதில் சேவூர் சுற்று வட்டார வியாபாரிகள் 2 பேர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன்படி குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,300 முதல் ரூ.7,500 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது….