காஸ்ட்லியான பைக்கில் வந்து காஸ்ட்லியான செருப்பு திருட்டு..!! புகார் அளித்த மாஸ்டர் பட நடிகை..!!
மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த துணை நடிகையின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து அவரது காலணியை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்… என்ன நடந்தது…? கொள்ளையர்கள் தொடர்பான விவரங்கள் போலீசாருக்கு கிடைத்ததா… இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம. நடிகர் விஜய் நடித்த “மாஸ்டர்” மற்றும் ஆர்.ஜெ பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சங்கீதா. இவர் பல சீரியல்களிலும் நடித்து பிரபல சின்னத்திரை நடிகையாகவும் வலம் வருகிறார்….