போலி ஆவணம் மூலம் “ரூ.2 கோடி” நிலம் மோசடி..!!வாலிபர் கைது..!!

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை சென்னை அண்ணாநகர் மேற்கு பயோனீர் காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 87). இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் லட்சுமிபிரகாஷ் நகரில் 2,400 சதுரஅடி கொண்ட 2 இடத்தை சிவப்பிரகாசம் என்பவரிடம் இருந்து 1983-ம் ஆண்டு வாங்கி பூந்தமல்லி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து அனுபவித்து…

மேலும் படிக்க

திருப்பூரில் சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் கைது..!!

திருப்பூர் பீகார் மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது கணவர் இறந்து விட்டதால், தனது 15 வயது மகளுடன் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்குமார் (வயது 30) என்பவர் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சிறுமிக்கும், அர்ஜூன்குமாருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. கடந்த 11-ந் தேதி அந்த சிறுமி தனது தாயாரிடம் சண்டை…

மேலும் படிக்க

மணிப்பூரில் மீண்டும் கலவரம்..!!11 பேர் உயிரிழப்பு..!!

மணிப்பூர் மாநிலம் காமன்லோக் பகுதியில் நடந்த வன்முறையில் குறைந்தது 11 பேர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், விடுப்பில் சென்ற போலீசார் உடனே பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். இம்பால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு நடந்த தாக்குதலில் குறைந்தது…

மேலும் படிக்க

‘செந்தில் பாலாஜியை’ சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் ‘மு.க.ஸ்டாலின்’..!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை, அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜுக்கு ஆஞ்சியோகிராம் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல் எனத்தகவல் வெளியாகி உள்ளது. இசிஜியில் மாறுபாடு இருந்தால் இதய ரத்த…

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத ‘பாட் டேக்சி’ சேவை ~ உத்தர பிரதேசத்தில் செயல்படுத்த திட்டம்..!!

லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ‘ஜெவார் விமான நிலையம்’ கட்டப்பட்டு வருகிறது. இது உலகின் 4-வது மிகப்பெரிய விமான நிலையமாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜெவார் விமான நிலையத்தை நொய்டா பிலிம் சிட்டியுடன் இணைக்கும் வகையில், ஓட்டுநர் இல்லாத ‘பாட் டேக்சி’ சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவி செய்யும் அதிநவீன போக்குவரத்து…

மேலும் படிக்க

‘நீட்’ தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற செஞ்சி மாணவர் “பிரபஞ்சன்”..!!

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத …

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 12) சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே மாதம் 4-ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை)…

மேலும் படிக்க

மாமன்னன் படத்தின் “கொடி பறக்குற காலம்” பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு..!!

மாரி செல்வராஜின் வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை, ‘கண்ணை நம்பாதே’ படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள் படம் ‘மாமன்னன்’. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘மாமன்னன்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது….

மேலும் படிக்க

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் : அக்.15-ல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்..!!

புதுடெல்லி: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்தொடர் வரும் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்த தொடருக்கான வரைவு அட்டவணையை ஐசிசி-யிடம் பகிர்ந்துள்ளது. இதனை ஐசிசி, தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் கருத்து கேட்பதற்காக அனுப்பி வைத்துள்ளது. வரைவு அட்டவணைப்படி அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூஸிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா…

மேலும் படிக்க

பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவிவசாயிகளுக்கு செயல் விளக்கம் பயிற்சி..!!

எருமப்பட்டி எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதை தடுப்பதற்கு வேளாண் அறிவியல் நிலையம் லத்துவாடி பூச்சியியல் வல்லுனர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா கூறியதாவது:- எருமப்பட்டி வட்டாரத்தில் மயில்களால் பல்வேறு வேளாண்மை பயிர்கள் சேதம் அடைகின்றன. இவற்றை தடுப்பதற்கு ஹொர்போலிங் என்ற மூலிகை பூச்சி விரட்டி பயன்படுத்தி ஈச்ச வாரி கிராமத்திலும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram