தென்கொரியாவின் ரிலே ஓட்டத்தில் தங்கம் வென்ற நெல்லை மாணவி ~ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு..!!

தென்கொரியாவில் நடைபெற்ற ரிலே ஓட்டப்பந்தயத்தில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் மரியதேவசேகர். இவர்அப்பகுதியில் உள்ள தெரசா மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளுக்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்து அவர்களது முன்னேற்றத்திற்காக வழிகாட்டுதலாக இருந்து வருகிறார். இதர மாணவர்களை போன்று அவரது மகளான கனிஸ்டா டினாவிற்கும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பயிற்சியும் ஊக்கமும்…

மேலும் படிக்க

பாலக்காடு அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய பேருந்து..!!

பாலக்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலம், பாலக்காடு திருச்சூர் நெடுஞ்சாலை சிக்னலில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து காரின் பின்புறம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. பேருந்து மோதிய வேகத்தில் கார் முன் சென்றது; கார் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சாலையின் மறுபுறம் வளைந்து நின்றது. காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் இருந்தனர். மூவரும் எந்தவித பாதிப்புமின்றி…

மேலும் படிக்க

ஊராட்சி நிர்வாகத்தால் மாசடையும் நீர்நிலைகள்..!!

பெரியகுளம் அருகே நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி ஊராட்சி நிர்வாகம் மாசுபடுத்தி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஊரின் அருகே உள்ள குளத்தின் உட்பகுதி மற்றும் குளக்கரையோரங்களில் கொட்டுவதால் சுற்றுசூழல் மாசு எற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளை தொடர்ந்து மாசடைய செய்யும் செயல்களில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக…

மேலும் படிக்க

தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் ~ இபிஎஸ் பேட்டி..!!

அமலாக்கத்துறை தொடர் நடவடிக்கைகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி  பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.  மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்….

மேலும் படிக்க

உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு..!!

நியூயார்க், உக்ரைனில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட சோவியத்- காலத்து மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை ஜூன் 6-ம் தேதி உடைந்தது. இதனால் 18 கியூபிக் கி.மீ. பரப்பளவு தண்ணீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது. இந்த அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின. இந்நிலையில் இந்த அணை உடைப்பின் தாக்கம் குறித்து ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறுகையில், இந்த தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (14.06.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15.06.2023 மற்றும் 16.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

மேலும் படிக்க

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் ரூ.7.96 கோடி அபராதம் வசூல் ~ போக்குவரத்து காவல்துறை தகவல்..!!

கடந்த 5 மாதங்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.7.96 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. சென்னை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- “சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. இதைத்தொடர்ந்து 3 நாட்கள் 156 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது….

மேலும் படிக்க

திருமணமான ஒரு மாதத்தில் சாலை விபத்தில் புதுமண தம்பதி பலி..!!

திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சோலாபூரை சேர்ந்தவர் மலு தெர்டல் (வயது 31). இவரது மனைவி காயத்ரி (வயது 24). இந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, புதுமண தம்பதி இன்று காலை பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சோலாபூர் பைபாஸ் சாலையில் சென்றபோது பைக் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் புதுமண…

மேலும் படிக்க

ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன் ~ அண்ணாமலை..!!

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன். ஒரு பெண்ணாக அவர் திமுகவை எதிர்கொண்டு வளர்ந்து வந்த விதம் குறித்து பல முறை நான் பேசி உள்ளேன். அவருடைய பெயரை எங்குமே நான் குறிப்பிடவில்லை. நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு…

மேலும் படிக்க

பீகார் பால விபத்து: மாயமான காவலாளி 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!!

பீகார் பால விபத்தில் மாயமான காவலாளி 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாட்னா, பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே சுல்தான்கஞ்ச் – அகுவானி பகத் பகுதியை இணைக்கும் வகையில் 4 வழி பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலம் கடந்த 4-ம் தேதி காலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளை, பாலம் இடிந்து விழுந்த சமயத்தில் பாலத்தில் பணியாற்றி வந்த விபஷாகுமார்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram