பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை..!!

சென்னை, சென்னை பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தாஸ் என்பவர் பள்ளி மாணவியை, கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த நிலையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாஸ் என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்கவும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்…

மேலும் படிக்க

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் – சென்னை மாநகராட்சி..!!

பொதுமக்கள் யாரும் மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை, சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். தண்ணீர் தேங்கி நின்ற பகுதிக்கு மாநகராட்சி, குடிநீர் வாரிய…

மேலும் படிக்க

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தை மாரடைப்பால் மரணம்..!!

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது புகார் எழுந்து உள்ளது. கோட்டயம்: கேரளா மாநிலம் கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்தவர் எபி இவரது மனைவி ஜோன்சி. எபி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினரின் மகன் எட்டு மாதக் குழந்தை ஜோஷ், காய்ச்சல் காரணமாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு பிந்தைய கொரோனா பாதிப்பு நோய் இருக்கலாம் என்ற முடிவின்…

மேலும் படிக்க

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் ~ சென்னை மாநகராட்சி..!!

சென்னை, சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். தண்ணீர் தேங்கி நின்ற பகுதிக்கு மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் சென்று அதனை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 44 இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது….

மேலும் படிக்க

மியான்மரில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு..!!

நைபிடா, மியான்மரில் தெற்கு கடலோர பகுதியருகே இன்று காலை 7.10 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்பு விவரங்கள் அடங்கிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

தொடர் மழை: கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதை மூடல்..!!

சென்னை. சென்னை, செங்கல்பட்டு உள்ளிடட் மாவட்டங்களில் நேற்றிரவில் இருந்து கனமழை பெய்தது வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் 50 மி.மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது. கிண்டி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகள் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. சென்னை, புறநகரில் பரவலாகப் பெய்த மழையால், காலை நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். இந்த நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா பாலத்தின் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது….

மேலும் படிக்க

ராயப்பேட்டையில் பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து..!!

சென்னை தீ விபத்து சென்னை ராயப்பேட்டை, தலையாரி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் உள்ள பாரதி சாலையில் மரத்தினால் ஆன சோபா, நாற்காலி மற்றும் பஞ்சு மெத்தை தயாரித்து விற்பனை செய்யும் பர்னிச்சர் கடையை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைக்கு விடுமுறை ஆகும். நேற்று மாலை 4 மணியளவில் அவரது பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதை கண்ட அருகில் இருந்தவர்கள்…

மேலும் படிக்க

மாம்பழம் பறித்ததில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் – 2 பேர் பலி..!!

மாம்பழம் பறித்ததில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். ராஞ்சி, உத்தரகாண்ட் மாநிலம் பஹூர் மாவட்டம் மகேஷ்பூர் அருகே கணேஷ்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு மா மரத்தில் சில மாம்பழம் பறித்துள்ளனர். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று இரவு கிராமத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த டேவிட்ஹன் முர்மு, வஹில் முர்மு (வயது 30)…

மேலும் படிக்க

மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்..!!

மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் குவிந்த பொதுமக்கள், சிறிய வகை மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சென்னை காசிமேடு தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அன்று நள்ளிரவே மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். வழக்கமாக வாரவிடுமுறை நாட்களில் காசிமேடு…

மேலும் படிக்க

கோயம்பேட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்..!!

சென்னை கோயம்பேடு போலீஸ் மாவட்டம் சார்பில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் கோயம்பேட்டில் நேற்று காலை நடைபெற்றது. சென்னை இந்த மாரத்தான் ஓட்டத்தை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கி வைத்தார். கோயம்பேட்டில் தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டம் வானகரத்தில் முடிவடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஓடினர். பின்னர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர். அதைதொடர்ந்து சிலம்பாட்டம், பரதநாட்டியம், நடனம் போன்ற…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram