4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு லேசான மழை பெய்தது. இதனை தொடர்ந்து புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இந்த சூழலில், வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை…

மேலும் படிக்க

தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு –

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன், வளர்மதி. இவர்களுக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. அதில் தென்னை மட்டை உரிப்பதற்காக அக்கிராமத்தை சேர்ந்த கல்யாணி, ஜெயலட்சுமி , சின்னசாமி என மூவரும் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென அங்கு வந்த மலை தேனீக்களின் கூட்டம் மூவரையும் தாக்கியுள்ளது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் தேனீக்கள் தாக்கியதால் நிலை குலைந்து போன மூவரும், அருகே இருந்த பேருந்து நிலையத்தில் மறைவதற்க்காக ஓடியுள்ளனர். ஆனால் இவர்களை விடாமல் துரத்தி சென்ற…

மேலும் படிக்க

தங்கம் விலை உயர்வு – 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை…

மேலும் படிக்க

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை !

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வானுவாட்டு தீவு. வானுவாட்டு தீவு நாட்டுக்கு 54 கி.மீ. தொலைவில் இன்று (டிச.17) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வானுவாட்டு தீவை சுற்றியுள்ள…

மேலும் படிக்க

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்” –

“இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்! அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் இத்திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திணிக்கிறது. இது நமது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானதாகும். நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தால் நமது அரசியலமைப்பை வடித்துத் தந்தோர் நம் நாடு அராஜகத்துக்குள்ளும்…

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் தொடங்கும் கனமழை –

டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (டிசம்பர் 15) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில்நகரக்கூடும்….

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன் பட்டம் குகேஷுக்கு பரிசுத்தொகை அறிவித்த முதலமைச்சர் –

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் வெற்றிப் பெற்றார். இதன்மூலம் இளம் உலக செஸ் சாம்பியன் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். மேலும் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற 2வது தமிழக வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் ரஷ்யாவின் கேரி கேஸ்ப்ரோ 22 வயதில் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்த…

மேலும் படிக்க

13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ கூட்டணி –

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் கடைசியாக நானே வருவேன்’ படம் வெளியானது. படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். ‘பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல்’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.இந்த சூழலில், செல்வராகவன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். அப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க…

மேலும் படிக்க

நடிகர் அல்லு அர்ஜுன் கைது !

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர்….

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கிக்கு ரஷிய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் –

மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக நவம்பர் 16-ம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram