ரூ.2 கோடி கொடுத்து “டைட்டானிக்” கப்பலை காணச் சென்ற சுற்றுலாப்பயணிகள் மாயம்..!!
லண்டன் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தின் போது, ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் ஏப்ரல் 15, 1912 இல் பனிப்பாறையில் மோதி வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 2,224 பேரில் 1,500க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு கடலில் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, டைட்டானிக் கப்பலைச் சுற்றி பல ஆய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக்…