திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்த கல்லூரி மாணவர்கள் – 5 பேருக்கு அபராதம்..!!

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் ஏறிய கல்லூரி மாணவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பரபரப்பு நிலவியது. இதில் 5 பேருக்கு திருவள்ளூர் கோர்ட்டு அபராதம் விதித்தது. திருவள்ளூர் சென்னையில் உள்ள கல்லூரிக்கு வருவதற்காக சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லக்கூடிய விரைவு புறநகர் மின்சார ரெயிலில் ஏறினர். நேற்று கல்லூரி முதல் நாள் என்பதால் மாணவர்கள் ரகளையில்…

மேலும் படிக்க

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. திருவள்ளூர் கடந்த 2 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவான 3,231 மில்லியன் கனஅடியில் தற்போது 1,257 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழையின்…

மேலும் படிக்க

நடிகர் ராம் சரணுக்கு பெண்குழந்தை..!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், பிரபல நடிகர் சீரஞ்சீவியின் மகனுமான நடிகர் ராம்சரண் 2007ம் ஆண்டு வெளியான ”சிறுத்தா” எனும்  திரைப்படம் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கினார். நல்ல வசூலை பெற்ற இந்த படத்தினை தொடர்ந்து 2009ல் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் “மகதீரா” எனும் படத்தில் நடித்தார். இப்படம் தமிழில் மாவீரன் எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இப்படம் நடிகர் ராம் சரணின் திரைப்பயணத்தில் மிக…

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்..!! உன்னிப்பாக கவனிக்கும் நாடுகள்..!!ஆய்வு நிபுணர் தகவல்..!!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என ஆய்வு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். வாஷிங்டன் டி.சி., பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று விமானத்தில் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்கின்றனர். இதன்பின் அவர்கள் இருவரும் வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடிக்கு…

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு இடி மின்னலுடன் நள்ளிரவை தாண்டியும் கனமழை பெய்தது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் லேசான தூறல் விழுந்த படி அதிகாலை முதல் கால நிலை காணப்படுகிறது. கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

மேலும் படிக்க

காதல் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லைக்கட்டி ஆற்றில் வீசிய கொடூரம் ~ மத்தியபிரதேசத்தை அதிரவைத்த ஆணவக்கொலை..!!

மத்தியபிரதேசத்தில் இளம் காதல் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லைக் கட்டி ஆற்றில் வீசிய கொடூரம் நடந்திருக்கிறது. போபால், மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷிவானி (வயது 18). இவரும், அருகில் உள்ள பாலுபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ராதேஷ்யாம் (21) என்ற வாலிபரும் காதலித்துவந்தனர்.அவர்கள் இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்றபோதும், அவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி முதல் இளம்பெண் ஷிவானியும், வாலிபர்…

மேலும் படிக்க

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்’ பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 65-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜனாதிபதிக்கு நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

வருமான வரித்துறை சம்மன்: செந்தில் பாலாஜி சகோதரர் ஆஜராகவில்லை என தகவல்..!!

சென்னை, அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அசோக் குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் சம்மன் அனுப்பியும் கடந்த 19-ந் தேதி அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராக வில்லை என கூறப்பட்டுகிறது. இதையடுத்து செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…

மேலும் படிக்க

புதுச்சேரியில் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து ~ பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்..!!

புதுச்சேரியில் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம் அடைந்தனர். புதுச்சேரி, புதுச்சேரியில் புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2 முதல் 5 வகுப்பு படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 குழந்தைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

மேலும் படிக்க

வெப்ப அலை எதிரொலி..!! மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம்..!!

நாடு முழுவதும் வெப்ப அலையை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது. புதுடெல்லி, நாட்டின் பல இடங்களில் வெப்ப அலை பரவி காணப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் உயர்மட்ட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜீவ்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram