உ.பி.யில் ரயில் விபத்து..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின்  பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். உத்தரபிரதேசத்தில் கோண்டா மற்றும் ஜிலாஹி இடையே அமைந்துள்ள பிகௌராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் பயணிகளை மீட்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.12 பெட்டிகளில், 4 ஏசி பெட்டிகள் தரம் புரண்டுள்ளன. தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். 

மேலும் படிக்க

துபாய் இளவரசி ,இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் விவாகரத்தை அறிவித்துள்ளார்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா. 1994 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக்கா மஹ்ரா துபாயின் இளவரசி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.இவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பிப் முஹம்மது பின் ராஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இந்நிலையில் துபாய்…

மேலும் படிக்க

நிலவில் மிகப்பெரிய குகை..!!

நிலவில் நாசா ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது தொடர்பாக, காந்த அலைகளின் தரவுகள் மற்றும் பூமியில் உள்ள எரிமலை குழாய்களை ஒப்பிட்டு NATURAL ASTRONOMY என்ற இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் ஆழத்தில் குகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபட வாய்ப்புள்ளது.  கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் தரையிறங்கிய இடத்தில் இருந்து சுமார்…

மேலும் படிக்க

நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்..!!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு  2 பேருந்துகள் கடந்த 12ம் தேதி அதிகாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் 7 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.விபத்தில் சிக்கிய ஒரு பேருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்த ஏஞ்ஜெல் பேருந்து என்பதும், அதில் 24 பயணிகள் இருந்ததாகவும், மற்றொரு பேருந்து காத்மாண்டுவிலிருந்து ரௌதஹத் அருகே கௌர் பகுதிக்கு…

மேலும் படிக்க

71 பாலஸ்தீனர்கள் உயிரிழந்த சோகம்..!!

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரையும் பணய கைதிகளை மீட்கும் வரை காஸா மீதான தாக்குதலை நிறுத்த போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 38,000 பேர் பலியாகியுள்ளனர்.  இந்நிலையில் காஸாவின்…

மேலும் படிக்க

அலுவலகத்தில் ஆபாச படம் பார்த்த தனியார் நிறுவன ஊழியரை 4 நாட்களுக்கு இருட்டறையில் பூட்டி வைத்து தண்டனை..!!

பொதுவாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது அலுவலகத்தின் வேலையை சரியாக செய்யாத போது அல்லது, அலுவலக நேரத்தில் வேறு வேலைகளில் ஈடுபடுவது மற்றும் அலுவலக நேரத்தை வீணடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நிறுவனம் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்வது வழக்கம்.சீனாவில் உள்ள Guangzhou Duoyi Network Co Ltd என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் அலுவலக நேரத்தில் வேலை செய்யாமல், தொடர்ச்சியாக தனது சொந்த வேலையில் ஈடுபட்டிருந்து…

மேலும் படிக்க

ஜப்பானின் ஒரு மாகாணத்தில் சிரிப்பதை கட்டாயப்படுத்தி சட்டம்..!! 

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்பார்கள்.  அதற்கேட்ப ஒரு நாட்டில் சிரிப்பதை கட்டாயப்படுத்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் யமகாட்டா ப்ரீஃபெக்சர் மாகாணத்தில் தான் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிரிப்பதற்கு என்றே மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கியுள்ளது இந்த சட்டம். ஒவ்வொரு மாதமும் எட்டாவது நாள் மக்கள் சிரிப்பதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் நாளொன்றுக்கு ஒருமுறை வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பணியிடங்களில் சிரிப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்கவும் அலுவலக…

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

உலகலவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்,  பிலிப்பின்ஸின் மின்டானோவோவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இன்று காலை 10.13 (பெய்ஜிங் நேரப்படி) ரிக்டர் அளவில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நிலநடுக்கம் 620 கி.மீ. ஆழத்தில் தாக்கியது. அதன் மையம் 6.1 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 123.3 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை…

மேலும் படிக்க

பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல்..!!

தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ‘ஹுவாஸ்காரன்’ மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்ஃபில் என்ற மலையேற்ற வீரர் அவரது நண்பர்களான மேத்யூ ரிச்சர்ட்சன், ஸ்டீவ் எர்ஸ்கைன் ஆகியோருடன் ஹுவாஸ்காரன் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வில்லியம் ஸ்டாம்ஃபில் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது.இந்நிலையில் 22…

மேலும் படிக்க

‘ஏர் கேரளா’ : 2025-ஆம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை தொடங்கும்..!!

கேரளாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடாவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களான அஃபி அஹமது மற்றும் அயூப் கல்லடா இருவரும் இந்த திட்டத்தை தொடங்க ஆர்வம் காட்டினார்.  கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளா விமான நிறுவனத்தை உருவாக்கினார். தொடர்ந்து ஏர் கேரளா இணையதள டொமைனை கைப்பற்றி நிறுவனத்தை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டினர். அதன்படி, கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து அது சாத்தியமாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் கேரளா விமான நிறுவனம் தொடங்க மத்திய சிவில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram