சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை | LYCA PRODUCTION

லைகா நிறுவனம் தமிழில் பல பெரிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்த ‘பொன்னியின் செல்வன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சென்னையில், லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி, சென்னை தி.நகரில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தவிர்த்து அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று…

மேலும் படிக்க

“தமிழ்நாடு அரசு மதுவிலக்கை நோக்கி நகர வேண்டும்”

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; நச்சு சாராயத்தை அருந்தி 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வேதனையை தருகிறது. தமிழக முதல் அமைச்சர், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்திருப்பது ஆறுதலை தருகிறது. கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தாலும், தமிழக அரசு அதை தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருப்பதாக விசிக கருதுகிறது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக…

மேலும் படிக்க

சாலை விதிமீறலா ? – இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது- புதிய நடைமுறைகள் அறிமுகம்

மத்திய அரசின் வழகாட்டுதல்களை பின்பற்றி புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிக வேகம், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள்…

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முடிவு

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிராமண பாத்திரத்தில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றை குறைத்து பொய்யான தகவல் தெரிவித்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி மனுவில் உண்மை தன்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு…

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்..! வானிலை மையம் தகவல்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்ப நிலை வரை உயர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை மற்றும் வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த…

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு – விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அவர்…

மேலும் படிக்க

சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,472 -க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.78,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

அன்னையர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து | Mother’s Day: Wishes from Chief Minister MK Stalin

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கொடைக்கானல் மலர் கண்காட்சி, கோடை விழா மே 26-ல் STARTS

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 26-ல் தொடங்கி ஜூன் 2 வரை நடைபெற உள்ளது என வருவாய் கோட்டாட்சியர் ரா.ராஜா தெரிவித்துள்ளார். கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 60-வது மலர் கண்காட்சி மே 26-ல் தொடங்கி மே 28 வரை நடைபெற உள்ளது. இதே போல், கோடை விழா மே 26-ல் தொடங்கி ஜூன் 2 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பிரையன்ட்…

மேலும் படிக்க

டெல்லியில் CONGRESS தொண்டர்கள் கொண்டாட்டம் –

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 73 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் தற்போதே கொண்டாடி வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை அடுத்து பிரியங்கா காந்தி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram