‘காங்கிரஸ் எழுப்பிய 9 கேள்விகள் பொய் மூட்டை’ B.J.P
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவுற்றுள்ள தருணத்தில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை எழுப்பி உள்ளது.இதற்கு பதிலடி கொடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-இந்தியாவின் நிலம் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் சீனாவால் பறிக்கப்பட்டது. கிழக்கு லடாக்கில் அண்டை நாட்டுடன் மோதல் வெடித்தபோது நாடு தைரியத்தை காட்டியது.மோடி ஆட்சி காலத்தில் எல்லை உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே மோசமான நிலையில் வைத்திருந்தது அவர்கள் (காங்கிரசார்) மோடி மீதான வெறுப்புக்கு வெளியே வர வேண்டும்….