பனை மரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதம்..!!
பாகூர் பாகூரில் பனைமரம் சாய்ந்து விழுந்து வீடு, கடை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக தாய், மகன் உயிர் தப்பினர். பனைமரம் சாய்ந்து விழுந்தது புதுச்சேரி மாநிலத்தில் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி திகழ்கிறது. இந்த ஏரியின் கரையோரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கரையோரத்தில் இருந்த மனைமரம் ஒன்று திடீரென சாய்ந்து சாலையோரத்தில் இருந்து சுந்தரி என்பவரது வீடு மற்றும் ரவி என்பவரது திருமண பாத்திரங்கள் வாடகைக்கு விடும் கடையின் மீது விழுந்தன….