2-வது மனைவி மூலம் பெண் குழந்தைக்கு தந்தையான பிரபுதேவா..!!

நடிகர் பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத்தை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2019-ல் முதுகுவலி காரணமாக மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரபுதேவா சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் காதல் மலர்ந்தது. 2020-ம் ஆண்டு ஹிமானி சிங்கை, பிரபுதேவா திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் ரகசியமாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சமீபத்தில் மனைவி ஹிமானியுடன்…

மேலும் படிக்க

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவட்டும் இரண்டாவது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாவது யூனிட்டில் 2-வது அலகில் ஏற்பட்ட கொதிக்கலன் குழாய் கசிவால் 600 மெகாவாட்…

மேலும் படிக்க

மணிப்பூர் கலவரம் – 22 துப்பாக்கிகள் பறிமுதல்…!!

மணிப்பூரில் பாதுகாப்பு படைகளின் நான்காவது நாள் தேடுதல் வேட்டையில், 22 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூர், அண்மையில் மணிப்பூரில் நிகழ்ந்த கலவரத்தை தொடர்ந்து, அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனையடுத்து மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக நாட்டின் பாதுகாப்பு படைகள் இணைந்து, மணிப்பூரின் பதற்றமாக பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நான்காவது நாளாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 22 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. NEWS…

மேலும் படிக்க

ஆவடி அருகே என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்..!!

சென்னை பாட்னாவில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் அம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் பட்டாபிராம்-நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது திடீரென என்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என்ஜினில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடியும் முடியாததால் மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு பெங்களூரு புறப்பட்டு…

மேலும் படிக்க

எலக்ட்ரீசியனை வழிமறித்து பணம் பறித்தவர் கைது..!!

திருவள்ளூர் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் விக்டர் (வயது 35). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். கடம்பத்தூர் – விடையூர் வழியாக வந்துக் கொண்டிருந்த போது விடையூர் இந்திரா நகரை சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர் ஜான் விக்டரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்டுள்ளார். அப்பொழுது ஜான் விக்டர் மாமூல் தர முடியாது என்று கூறியதால் ஆத்திரமடைந்து…

மேலும் படிக்க

மாநிலம் முழுவதும் நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்தன..!!

தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 132 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர் அகமது கூறினார். சென்னை தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர மாநில அளவில் ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்தும்படி தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா உத்தரவிட்டார். இதன்படி…

மேலும் படிக்க

ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மெரினா காமராஜர் சாலையில் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையம்..!!

சென்னை சென்னை மெரினா காமராஜர் சாலைக்குட்பட்ட அண்ணா சதுக்கத்தில் மத்திய சென்னை எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையையும் திறந்து வைத்தார். மேலும் 15 டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இலவச சீருடைகளையும் அவர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து…

மேலும் படிக்க

அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது பிபோர்ஜாய்: சௌராஷ்டிரா & கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை..!!

புதுடெல்லி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த ஜூன் 5ம் தேதி மாலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நேற்று வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘பிபோர்ஜாய்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பிபோர்ஜாய்’ புயல். மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த 6…

மேலும் படிக்க

ஸ்டான்லி கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவர் மயங்கி விழுந்து சாவு..!!

சென்னை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 24). இவர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 5-ம் ஆண்டு படித்து வந்தார். ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி, பயிற்சி எடுத்து வந்தார். நேற்று முன்தினம் விடுதியில் உள்ள அறையில் மருத்துவ மாணவர் தனுஷ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சக மாணவரான ஆதித்யா என்பவர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தார். ஆனால்…

மேலும் படிக்க

காதலியை கொலை செய்து கழிவு நீர்த் தொட்டியில் வீசிய கோவில் பூசாரி..!!

சாய் கிருஷ்ணா தன்னை ஏமாற்றுவதை உணர்ந்ததை அடுத்து அப்சரா தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). இவர் அப்பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) என்ற பெண்ணுடன் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram