அமெரிக்க உணவகத்தில் “மோடிஜி தாலி” ~ பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு புதிய உணவு அறிமுகம்..!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக ஜூன்  மாதம் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர்  ஜோ பைடனை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவருக்கு விருந்து அளிக்க உள்ளதாக  அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்பயணத்தின் போது பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி போன்ற முக்கிய துறைகளில் தொழில்நுட்ப உறவை…

மேலும் படிக்க

இசைப்புயலின் மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகம்..!!

பாடகியும், ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளுமான கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி வரும் மின்மினி என்ற திரைப்படத்திற்கு கதீஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் கதீஜா குறித்து தனது சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள ஹலிதா ஷமீம், “மின்மினி படத்திற்காக கதீஜாவுடன் பணிபுரிவது மிக்க மகிழ்ச்சி, இவர் மிகவும் அசாதரணமான திறமைசாலி; பாடகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் மின்மினி திரைப்படத்திற்கு…

மேலும் படிக்க

கூடலூரில் பரபரப்பு : 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி..!!

நீலகிரி கூடலூர் கூடலூரில் பூட்டி கிடந்த இரண்டு வீடுகளில் பூட்டுகளை உடைத்துதிருட முயன்ற ஆசாமியின் உருவத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கூடலூர் 1-ம் மைல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த ஒரு வாரமாக தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பந்தலூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.மேலும் அதே…

மேலும் படிக்க

பந்தலூர் பகுதியில் பலத்த மழை..!!

நீலகிரி பந்தலூர் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் மதியம் வரை வெயிலும், பின்னர் மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி நேற்றும் பந்தலூர், எருமாடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எருமாடு கிராம நிர்வாக அலுவலகம் அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதேபோல்…

மேலும் படிக்க

பழிக்குப்பழி நடவடிக்கை : இந்திய பத்திரிக்கையாளரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட சீனா..!!

பிஜீங், கல்வான் மோதலுக்கு பின் இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தூதரக ரீதியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்ற நிலையில் சீன பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு இந்தியா தற்காலிக விசா வழங்கியது. அதன் பின்னர் விசா புதுப்பிக்கப்படவில்லை. 2020ம் ஆண்டு இந்தியாவில் 14 சீன பத்திரிக்கையாளர்கள் இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை…

மேலும் படிக்க

“அமித் ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை எல்லோரும் வரவேற்கிறோம்” ப.சிதம்பரம் டுவீட்..!!

தமிழரை நாட்டின் பிரதமராக ஆக்குவோம் என்று உள்துறை மந்திரி அமித் ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை எல்லோரும் வரவேற்கிறோம் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். சென்னை, தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பு இரண்டு முறை வந்தது. அதனை கெடுத்தது திமுகதான்.. ஆனால், தமிழகத்திலிருந்து ஒரு பிரதமரை பாஜக உருவாக்கும் என்று சொல்லியிருக்கிறார் அமித்ஷா. அமித்ஷாவின் இந்த பேச்சுதான் தமிழக தமிழகத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும்…

மேலும் படிக்க

மொபைல் எண் போதும்; நொடியில் உங்கள் தனிப்பட்ட ஆவணங்களை திருடும் டெலிகிராம் Bot..!!

உங்கள் மொபைல் எண் ஒன்று போதும் உங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பான் கார்டு எண் என அனைத்தையும் திருட முடியும். ஆம் நீங்கள் படித்தது சரிதான். முழுமையாக அறிய தொடர்ந்து படியுங்கள்… முன்பு நண்பர்கள் உறவினர்களை இணைக்கும் தளமாக மட்டும் இருந்த சமூகவலைதளம் இப்போது மெய்நிகர் மையங்களாகவும், மார்க்கெட்டிங் வணிகங்களை அணுகுவதற்கான தளமாகவும், வேலைகளைக் கண்டறியும் தளமாகவும் விளங்கி வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆப், டெலிகிராம் போன்ற தளங்கள் இந்த…

மேலும் படிக்க

ரூ.200 கோடியை வசூலித்த முதல் மலையாள படம்..!! பல ரெக்கார்டுகளை முறியடித்த ‘2018’ திரைப்படம்..!!

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கடந்த 2018-ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘2018’ மலையாள சினிமாவில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை குவித்த படம்…

மேலும் படிக்க

லூப் லைன் பிரச்சினை : சென்னை ~ கும்மிடிப்பூண்டி ரெயிலில் பராமரிப்பு பணியின் போது சக்கரங்கள் கீழே இறங்கியதால் அதிர்ச்சி..!!

சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் அதிகாலை பராமரிப்பு மேற்கொண்ட ரெயில் பொன்னேரி அருகே தடம்புரண்டது ரயில் லூப் லைனுக்கு மாறியபோது, பின் சக்கரங்கள் கீழே இறங்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை, சென்னை – கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் மின்கம்பிகள் பராமரிப்பு பணி மேற்கொண்ட ரெயில் பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தது. அங்கு லூப் லைனுக்கு மாறிய போது, ரெயிலின் பின்புற சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. தகவல் அறிந்த ரெயில்வே கோட்ட மேலாளர்…

மேலும் படிக்க

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்..!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த இரு வாரங்களாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3ஆம் இடம் வகிக்கும் செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், நான்காம் நிலை வீரரும் நார்வேயை சேர்ந்த…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram