அச்சுறுத்தும் பீபர்பாஜாய் புயல் : 8 ஆயிரம் பேர் வெளியேற்றம், பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு…!!

பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் புதுடெல்லி, பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அரபிக் கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘பிபா்ஜாய்’ புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது குஜராத்…

மேலும் படிக்க

மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்..!!

61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தை பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள்…

மேலும் படிக்க

சென்னையில் வாகன ஓட்டிகளை அலற வைக்கும் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள்..!!

சென்னையில் விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அபராத ரசீதை அனுப்பி, வாகன ஓட்டிகளை நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் அலற வைக்கிறது. சென்னை சென்னையில் போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் 31-ந்தேதி அன்று 2 நவீன நடமாடும் கண்காணிப்பு வாகனங்களை அறிமுகம் செய்தனர். இந்த வாகனங்களில் 360 டிகிரி சுழலக்கூடிய ஏ.என்.பி.ஆர். நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு வாகனத்தின் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். தற்போது சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து…

மேலும் படிக்க

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ரோட்டில் இறந்து கிடந்ததால் பரபரப்பு..!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ரோட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகே உள்ளது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் நேற்று மாலை 5.50 மணி அளவில் மர்ம வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அலுவலகத்துக்குள் நுழைந்து உள்பக்கமாக கதவை பூட்ட முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர் அந்த வாலிபரை விரட்டினார்….

மேலும் படிக்க

சென்னையில் ‘பீச் டிரைவ்-இன்’ தியேட்டர் ‘பிரார்த்தனா’ இடிக்கப்படுகிறது : காரில் அமர்ந்தபடி சினிமா பார்க்கும் வசதி கொண்ட முதல் திறந்தவெளி அரங்கம்..!!

பொழுதுபோக்கு என்றதும், சட்டென நினைவுக்கு வருவது சினிமாதான். ஆரம்ப சினிமா, தற்போதைய சினிமா என்று என்னதான் விமர்சித்தாலும் சினிமா என்றாலே அலாதி பிரியம்தான். 3 மணி நேரம் ஓடும் ஒரு திரைப்படம், கவலைகளை மறக்க செய்வதுடன், புதிய அனுபவங்களையும், தெரியாத விஷயங்களையும் கற்றுத்தருகிறது. இடிக்கப்படும் பழமையான தியேட்டர்கள் அந்த சினிமாவுக்கு சோதனைக்காலம் என்றால் அது கொரோனா காலம்தான். ஆம். கொரோனா காலகட்டத்தில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதில் பெரும்பாலான தியேட்டர்கள் கைமாற்றப்பட்டு, இடிக்கப்பட்டு, தற்போது குடியிருப்பு…

மேலும் படிக்க

தேசிய மருத்துவ தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் ~ பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

தேசிய மருத்துவ தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் (NEXT) என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று…

மேலும் படிக்க

ரூ.1¼ லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்..!!

திருப்பூர் சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு 20 விவசாயிகள் 70 மூட்டை நிலக்கடலையை கொண்டு வந்து இருந்தனர். இதில் சேவூர் சுற்று வட்டார வியாபாரிகள் 2 பேர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதன்படி குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,300 முதல் ரூ.7,500 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது….

மேலும் படிக்க

பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடன் நிற்கும்..!!

பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடன் நிற்கும் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கூறினார். சென்னை, திருவண்ணாமலையில், ராணுவ வீரரின் மனைவி அவமானப்படுத்தப்பட்டதாக சென்னை, டிஜிபி அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மனு அளித்துள்ளார். திருவண்ணாமலை ராணுவ வீரரின் மனைவி அவமரியாதை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தோம். அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி உறுதி அளித்துள்ளார். மகளிருக்கு…

மேலும் படிக்க

‘ஜவான்’ எடிட்டிங் நிறைவு, ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் – இது ஷாருக்கான் அப்டேட்..!!

ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ‘‘இன்று மாலை என்ன ப்ளான்’’ என கேட்ட கேள்விக்கு “அட்லீயுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தை பார்க்கலாம் என யோசிக்கிறேன்” என ஷாருக்கான் பதிலளித்துள்ளார். ‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில்…

மேலும் படிக்க

எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளரான 14 வயது சிறுவன்..!!

எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் AI டெக்னாலஜி படித்துள்ள 14 வயது சிறுவனுக்கு பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளதோடு, அச்சிறுவனுக்கு அந்நிறுவனத்தில் முக்கிய பதவியும் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கைரான் குவாசி. இவர் சிறு வயதிலேயே மிகவும் அறிவுக் கூர்மையுடன் இருந்ததால் அவரது 11 வது வயதிலேயே அமெரிக்காவின் கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்ததோடு, அவரது திறமைக்காகவும், கல்வி சாதனைகளுக்காகவும் பல்கலைக்கழக நிர்வாகமே ஆராய்ச்சி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram